கடந்த 23.07.2024 செவ்வாய் அன்று தனது பிறந்த நாளை கொண்டாடிய "கழக அமைப்புச் செயலாளர்" விருதுநகர்(மேற்கு) மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான திரு கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் "கடவுள் உள்ளமே கருணை இல்லமே" என்ற "அருள்" வாக்கின் பொருளறிந்து சாட்சியாபுரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில்அறுசுவை உணவளித்து இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்வித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் அதே இல்லத்தில் வளர்ந்து படித்த வந்த "காயத்ரி" என்னும் மாணவி தனது மேற்ப்படிப்புக்கான ஆர்வம் மற்றும் குறிக்கோள் ஆகியவற்றை இல்ல நிர்வாகி ஆலோசனையின் பேரில் "வாழும் கர்ணன்" திரு.கே.டி.ஆர் அவர்களிடம் தெரிவித்த போது கவனமாக கேட்டறிந்து ஆவண செய்வதாக உள்ளன்போடு உறுதியளித்தார். மாணவியின் இரண்டாண்டு "பி.எட்" படிப்புக்கான கல்விக்கட்டணம் மற்றும் அடிப்பபடைத் தேவைகளுக்கு என சுமார் "ஒரு லட்சம் ரூபாய் வழங்கி மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார். "மகிழ்வித்து மகிழ்" என்ற மேற்கோளுக்கு உதாரணமாய் செயல்படும் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிக்கும் நன்றியும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
கழக பணியில் ஈ.லாசர் அண்ணா தொழிற்சங்கம். KTR Aram Seivom