பெருந்தகை "பேரறிஞர்" அண்ணா அவர்களின் 116வது பிறந்த விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வின் சிறப்பு வருகையாளர் விருதுநகர் (மேற்கு)மாவட்டக் கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான "KTR "மற்றும் சிறப்பு பேச்சாளராக, தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில செயலாளர் "கல்யாணசுந்தரம்" கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் அவர்களுக்கு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்த சிவகாசி கிழக்குப்பகுதி கழக செயலாளர் சாம்(எ) ராஜா அபினேஷ்வரன் மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கமல்நாத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு கொடுத்தனர். மாவட்ட கழக நிர்வாகிகள் சார்பு அணியின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். மக்கள் அன்றாட தேவைகளுக்கு ஆக்கப்பூர்வமான பிரச்சனைகளுக்கும் போராடி கொண்டு வரிகொடுமை, வேலையிழப்பு விலைவாசி,மின் கட்டண உயர்வு என மக்களை கொடுமைப்படுத்தி வரும் விளம்பரப் பிரியர்களின் ஆட்சியை விரட்டி அடிக்க "அறிவுச்சிற்பி" அண்ணா அவர்களின் பிறந்த நாளில் உறுதியேற்போம் . 2026ல் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைப்போம் என்றும் உரையாற்றினார்.
KTR Aram Seivom